ரஜினி பருந்துன்னா... காக்கா யாருன்னு டுவிட்டரில் சண்டை..! குறுக்கே இந்த புளூ சட்டை வந்தா..

0 10842

ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பருந்துக்கும் காகத்துக்கும் இடையிலான சண்டை குறித்து குட்டிக்கதை சொல்லி ரஜினி பரபரப்பை பற்ற வைத்த நிலையில் லியோ படத்தின் வில்லனான சஞ்சய்தத்துக்கு பருந்து குறியீட்டுடன் லியோ படக்குழு பிறந்த நாள் வாழ்த்துக்கூறியுள்ளதால் டுவிட்டரில், ரஜினி, விஜய் ரசிகர்கள் கமெண்ட் யுத்தம் செய்து வருகின்றனர்.

ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அனிருத் கச்சேரியில் பீஸ்ட் படத்தின் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்ட ரஜினி ரசிகர்கள், கிளப்பிய அலப்பறையால் அரங்கமே அதிர்ந்தது

பேரை தூக்க நாலு பேரு ... பட்டத்தை பறிக்க நூறு பேறு என்று அனிருத் பாடிய ஹுக்ஹுகூம் பாடலுக்கு ரசிகர்களும் அவருடன் சேர்ந்து பாடி உற்சாகமடைந்தனர்

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கிடையே பேசிய ரஜினி, பீஸ்ட் படத்திற்கு கலவையான விமர்சனம் இருப்பதாக கூறி சிலர் நெல்சனை வேண்டாம் என்று கூறியதாகவும், தயாரிப்பு நிறுவனமும், வினியோகஸ்தர்களுடம் படம் வசூலில் குறைவில்லை என்று கூறியதால் ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்கியதாக தெரிவித்தார். பல ஆண்டுகளுக்கு முன்பே சூப்பர் ஸ்டார் பட்டத்தை தூக்கும்படி கூறியதாகவும், சில நல்லவர்கள் விருப்பத்தின் பேரில் அது தொடர்வதாக தெரிவித்தார்.

அப்போது ரஜினிகாந்த் தன்னை விமர்சிப்பவர்களை குறிக்கும் விதமாக குட்டிக்கதை ஒன்றை கூறினார். பருந்து மேல பறந்துகிட்டு இருக்கும் கீழே வந்தா காக்கை அதனை துரத்தி துரத்தி கொத்தும், ஆனால் காக்கையை பருந்து ஒன்னும் செய்யாது, காக்கை கூட்டமாக சேர்ந்து விரட்டி விரட்டி கொத்தி காயப்படுத்தினாலும், பருந்து திருப்பி தாக்காமல் மேல் நோக்கி பறந்து சென்று விடும் . இருந்தாலும் தனக்கு பயந்து ஓடுவதாக நினைத்து காகமும் விரட்டும் ஒரு கட்டத்துக்கு மேல காகத்தால் உயர பறக்க இயலாது.... என்று கூறி தன் பேச்சை நடுவில் நிறுத்திய ரஜினிகாந்த், நான் பொதுவா சொன்னேன் பின்ன சமூக வலைதளங்களில் , அவர காகம்ன்னு சொல்லிட்டாருன்னு எதிருவாங்க என்று சிரித்தார். குறைக்கிற நாய் குறைச்சிகிட்டு தான் இருக்கும், குறை சொல்லுகிற வாய் குறை சொல்லிகிட்டு தான் இருக்கும் நாம நம்ம வேலை செஞ்சிட்டு இருந்தா போதும் என்று கூறியதோடு, மதுக்குடிக்க வேண்டாம் என்றும் மதுபழக்கத்தால் தான் பட்ட கஷ்டங்களையும் ரசிகர்களுக்கு அறிவுறுத்தலாக தெரிவித்திருந்தார் ரஜினிகாந்த்.

இந்த நிலையில் காகக்கூட்டம் என்று அவர், விஜய் ரசிகர்களைத்தான்சொன்னதாக டுவிட்டரில் ரஜினிரசிகர்கள் குறிபிட்ட நிலையில், லியோ படத்தில் வில்லனாக நடிக்கும் சஞ்சய்தத்தை பருந்தாக குறிப்பிட்டு பிறந்த நாள் வாழ்த்து கூறி வீடியோ ஒன்றை லியோ படக்குழு இன்று வெளியிட்டு உள்ளது

இதையடுத்து ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் கமெண்ட் யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே ரஜினி தன்னைத்தான் காக்கா என்று குறிப்பிட்டதாக கூறி வாண்டடாக வந்து வண்டியில் ஏறிய நாய் சேகர் போல சினிமா விமர்சகர் புளுசட்டை மாறன் ஒரு பக்கம் ரஜினிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களைமுன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments