வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி56 ராக்கெட்

0 1191

7 சிங்கப்பூர் செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த ராக்கெட் சிங்கப்பூருக்கு சொந்தமான டி.எஸ்.-சாட் எனும் புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோள் உட்பட 7 செயற்கைக் கோள்கள்களை சுமந்து சென்றது.

ராக்கெட் ஏவப்பட்ட 23 ஆவது நிமிடத்தில், செயற்கைக்கோள்கள் புவி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

இந்த ராக்கெட்டில் அனுப்பப்பட்ட பிரதான செயற்கைக் கோளான டி.எஸ்.-சாட், சிங்கப்பூர் அரசு மற்றும் எஸ்.டி இன்ஜினியரிங் நிறுவனத்தின் கூட்டமைப்பில் உருவாக்கப்பட்டதாகும்.

செயற்கைத்துளை ரேடார் கருவியை கொண்டுள்ள இந்த செயற்கைக்கோள், இரவு, பகல் என அனைத்து காலநிலையிலும் வானிலை தகவல்களை துல்லியமான படங்களுடன் வழங்கும் என்றும் மற்ற 6 செயற்கைக்கோள்கள் பல்வேறு ஆய்வுகளுக்கு பயன்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 வாரங்களுக்கு முன் சந்திராயன் -3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ, தற்போது வணிக ரீதியில் பி.எஸ்.எல்.வியை செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments