ஆர்டர் செய்யாமலேயே வீட்டு வாசலில் குவிந்த அமேசான் பார்சல்கள்... மக்களுக்கு இலவசமாக வழங்கிய வீட்டு உரிமையாளர்....!

0 12781

அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலத்தைச் சேர்ந்த சின்டி ஸ்மித் என்ற பெண்ணுக்கு, ஆர்டர் செய்யாமலேயே தினமும் அமேசானிலிருந்து நூற்றுக்கணக்கான பார்சல்கள் வந்துள்ளன.

வீட்டின் வாசல் கதவையே மறைக்கும் அளவிற்கு குவிந்த பார்சல்களில் பெறுநர் பெயர் மட்டும் சின்டி ஸ்மித் என்பதற்கு பதிலாக லிக்ஸியோ ஜாங் (Lixiao Zhang) என இருந்துள்ளது.

வீட்டில் ஆயிரக்கணக்கில் குவிந்த பைனோகூலர்கள், தலையில் அணியக்கூடிய டார்ச் லைட்கள் போன்றவற்றை வைத்து என்ன செய்வது எனத் தெரியாமல் குழம்பி போன சிண்டி, தான் செல்லும் இடங்களில் எல்லாம் அவற்றை இலவசமாகத் தர தொடங்கினார்.

அமேசான் கிடங்குக்கு வாடகை கட்ட விரும்பாத லிக்ஸியோ ஜாங் (Lixiao Zhang) என்ற விற்பனையாளர்  சரக்கை காலி செய்ய இவ்வாறு செய்தது தற்போது தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments