விபத்திலிருந்து பாதுகாக்கும் மாதிரி பயிற்சி ஒத்திகை... தனியார் மருத்துவமனை நடத்திய ஒத்திகையில் பங்கேற்றவர்கள் விபத்தில் சிக்கியவர்கள் போன்று தத்ரூப நடிப்பு...!

கோயம்புத்தூரில் தனியார் மருத்துவமனை சார்பில் விபத்திலிருந்து பாதுகாக்கும் பயிற்சி ஒத்திகை நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைந்துள்ள பிரதான சாலையில் கல்லூரி பேருந்து இருசக்கர வாகனத்தை மோதி, மின்கம்பத்தில் இடிப்பது போல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
இதில் பங்கேற்றவர்கள் அனைவரும், விபத்தில் காயமடைந்தவர்களை போன்று தத்ரூபமாக நடித்து காட்டினர். பேருந்து சக்கரத்தில் சிக்கியதாக நடித்த நபர் அடிபட்டது போன்று சுமார் அரை மணிநேரமாக அதே இடத்தில் கிடந்தார்.
அவசர நிலை ஏற்பட்ட உடனே மீட்பு குழு விரைந்து நோயாளிகளுக்கு முதலுதவி செய்து, உயர் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு சிகிச்சை அளித்து, மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றினர்.
இந்த ஒத்திகையில், அவசரகால குறியீடு, மஞ்சள் தல மீட்பு குழு, உள் சோதனை குழு, கார்டன் குழு, காப்பு குழு மற்றும் நோயாளி தகவல் மேலாண்மை குழு போன்றவை அமைக்கப்பட்டன.
Comments