கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி உள்பட 4 பேர் பலி....!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பில் மோதி, பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
சென்னையில் வசித்து வந்த அஜித், தனது மனைவி மதுமிதா, மனைவியின் தாயார் தமிழ்செல்வி மற்றும் ஒரு வயது பெண் குழந்தையுடன் ஜி.எஸ்.டி. சாலை வழியாக காரில் திண்டுக்கல்லுக்கு சென்றுகொண்டிருந்தார்.
வேப்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பில் மோதி பறந்து சென்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. காரிலிருந்த 4 பேரும் உயிரிழந்தனர்.
அஜித் தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதால் விபத்து நேர்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
Comments