மீனவரை சரமாரியாக தாக்கி கடத்தி சென்றவர்களின் காரை 10 கி.மீ. தூரம் விரட்டி சென்று 5 பேரை கைது செய்த போலீசார்...!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் மீனவரை சரமாரியாக தாக்கி கடத்தி சென்றவர்களின் காரை விரட்டி பிடித்த போலீசார் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.
குளச்சல் பயணியர் விடுதி சந்திப்பு அருகே நடந்து சென்று கொண்டிருந்த மீனவர் விஜு என்பவரை கேரளா பதிவெண் கொண்ட ஸைலோ காரில் வந்தவர்கள் கடத்திய நிலையில், அப்பகுதியில் இருந்தவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, வாகன சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கருங்கல் பகுதியை கார் கடந்து செல்வதாக தகவல் அறிந்ததையடுத்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று கைச்சுண்டி என்ற பகுதியில் போலீசார் காரை மடக்கி பிடித்துள்ளனர்.
கைது செய்தவர்களிடம் நடத்திய விசாரணையில், கொல்லம் பகுதியை சேர்ந்த பெபின் என்பவருக்கும் விஜுவுக்கும் மீன்பிடி தொழிலில் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் பிரச்சனை சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில் கூலிப்படையை வைத்து கடத்தியதும் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
Comments