திருமண விழாவை சிறப்பிக்கும் விதமாக மனைவிக்கு பிடித்த சூரியகாந்தி மலர்களை 80 ஏக்கரில் சாகுபடி செய்து இன்ப அதிர்ச்சி தந்த விவசாயி...!

அமெரிக்காவின் கான்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது ஐம்பதாம் ஆண்டு திருமண விழாவை சிறப்பிக்கும் விதமாக 80 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி மலர்களை சாகுபடி செய்துள்ளார். லீ வில்சன் என்ற அந்த விவசாயி தனது மனைவி ரெனீ-க்கு சூரியகாந்தி மலர்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதற்காக மகனுடன் சேர்ந்து கடந்த 3 மாதங்களாக ரகசியமாக அவற்றை சாகுபடி செய்துவந்துள்ளார்.
ஏக்கருக்கு 15,000 மலர்கள் வீதம், அங்கு பூத்து குலுங்கும் 12 லட்சம் சூரியகாந்தி மலர்களை காண கான்சாஸ் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் ஆர்வமுடன் வந்து ஃபோட்டோஷூட் நடத்திவருகின்றனர்.
Comments