கலாமின் கனவுகளை நிறைவேற்றி வருகிறார் பிரதமர் மோடி - அமித் ஷா

0 871

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் எந்த இலக்கை நோக்கி பயணிக்க நினைத்தாரோ அவரது அந்த கனவை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றி வருவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாமின் நினைவுகளுக்கு மரணமில்லை என்ற பெயரில் புத்தகம் ஒன்றை வெளியிட்டு பேசிய அமித் ஷா, அக்னி, பிருத்வி ஏவுகணைகளை உருவாக்குவதிலும் பொக்ரைன் அணுகுண்டு சோதனை யிலும் கலாமின் பங்களிப்பை நினைவு கூர்ந்தார். குடியரசு தலைவராக இருந்தபோது கலாமின் செயல்பாடுகள் பொதுவாழ்வில் இருந்த தலைவர்களுக்கு பாடமாக அமைந்தது என்றார் அவர்.

இந்திய வரலாற்றில் 2 சிறிய சூட்கேசுடன் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்து, அதே சூட்கேசுடன் திரும்பி சென்ற ஒரே நபர் அப்துல் கலாம் தான் என்று அவர் குறிப்பிட்டார். தனக்கு பிறகு தனது சொத்துகளை  வாங்குவதற்கு கூட பிள்ளைகள் இல்லை என்று கலாம் கூறி இருந்த கருத்தில் மட்டும் தமக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்த அமித் ஷா, இந்தியாவின் ஒவ்வொரு குழந்தையும் கலாமின் குழந்தைகள் தான் என்று கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments