சகோதர உறவு முறை கொண்ட பெண் திருமணத்துக்கு மறுத்ததால் படுகொலை..!

திருமணம் செய்ய மறுத்த ஆத்திரத்தில் சகோதரி முறை கல்லூரி மாணவியை ஒருவர் இரும்புத் தடியால் அடித்துக் கொலை செய்தார்.
மூன்று நாட்களாக கொலைக்கான சதித்திட்டம் தீட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.டெல்லியின் மால்வியா நகரில் உள்ள பூங்காவில் சந்திக்க வருமாறு நர்கிசுக்கு அழைப்பு விடுத்த இர்பான் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி கேட்க அதற்கு சகோதர உறவு முறையைக் காரணம் காட்டி நர்கிஸ் மறுத்துள்ளார்.
நர்கிசின் குடும்பத்தினரும் இந்த உறவுக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இரும்புத் தடியால் நர்கிசை கொலை செய்த இர்பானை போலீசார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட இர்பான் ஸ்விகியில் டெலிவரி பணியில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்
Comments