ஸ்டிக்கர் மேல் ஸ்டிக்கர் ஒட்டி ரூ 500 கோடியை சுருட்டிய போக்குவரத்து துறை..!

0 32364

தமிழக போக்குவரத்து துறையில் வாகனங்களில் ஸ்டிக்கர் மீது கட்டாயப்படுத்தி ஸ்டிக்கர் ஒட்டுவதில் மட்டும் 500 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக  தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் குற்றஞ்சாட்டி உள்ளார்

கனரக வாகனங்களில் ஏற்கனவே ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர் மீது ஆர்.டி.ஓ ஒப்பந்த நிறுவனங்கள் தங்கள் நிறுவன ஸ்டிக்கர்களை வலுக்கட்டாயமாக ஒட்டும் காட்சிகள் தான் இவை

தமிழ்நாடு போக்குவரத்து துறை 1200 ரூபாய் மதிப்புடைய பிரதிபலிக்கிற ஸ்டிக்கரை, குறிப்பிட்ட 5 நிறுவனங்களிடம் தான் ஒட்ட வேண்டும் என்ற நிபந்தனை விதித்து வண்டிக்கு 4200 ரூ கட்டாயப்படுத்தி வசூலிக்கப்படுவதாகவும் , 800 ரூ மதிப்புடைய வேககட்டுப்பாட்டு கருவி 4000 ரூ மேல் விற்கப்படுகிறது என்றும் மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் தெரிவித்துள்ளார்

மத்திய போக்குவரத்து துறை அங்கீகரித்த 15 நிறுவனங்களிடம் இருந்து ஸ்டிக்கர் பெறாமல், வெறும் 5 நிறுவனங்களிடம் மட்டுமே ஸ்டிக்கர் ஓட்டுவதற்கும் லாரி உரிமையாளர்கள் கட்டாயப்படுத்தபடுவதாகவும் , தங்கள் வாகனத்தில் ஸ்டிக்கர் ஏற்கனவே நல்ல முறையில் இருந்தாலும் அதன் மீது மீண்டும் ஸ்டிக்கர் ஓட்டுவதற்கும் கட்டாயப்படுத்தப்படுவதாகவும் யுவராஜ் வேதனை தெரிவித்துள்ளார்

அமைச்சருக்கும், போக்குவரத்து ஆணையருக்கும் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என யுவராஜ் தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments