''தாம் ஆட்சி செய்யும் மாநிலத்தில் என்ன நடக்கிறது என தெரியாமல் முதலமைச்சர் உள்ளார்..'' - எடப்பாடி பழனிசாமி...!

0 2026

தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மேல் உள்ள அமலாக்கத்துறை வழக்குகளை மறைக்க அடிப்படை ஆதாரமின்றி அ.தி.மு.க.வினர் பற்றி முதலமைச்சர் அவதூறாக  பேசி வருவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதும், கட்சி நிர்வாகிகள் மீதும் போலீசாரால் புனையப்பட்ட வழக்குகள்தான் உள்ளனவே தவிர அமலாக்கத்துறை வழக்குகள் ஏதும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

மணிப்பூர் சம்பவம் குறித்து தான் ஏதும் பேசவில்லை என முதலமைச்சர் கூறுவதாகவும், கலவரம் துவங்கிய உடனேயே அதைக் கண்டித்தும், அங்குள்ள தமிழர்களை பாதுகாப்பாக காப்பாற்றுமாறும் மே 8ஆம் தேதியன்று அறிக்கை வெளியிடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமது அறிக்கை பற்றி அறிந்து கொள்ளாமல், மாநிலத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் முதலமைச்சர் உள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் 2019ஆம் ஆண்டில் தமது ஆட்சியில் 7 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடந்ததாகவும், தி.மு.க. அரசின் 2022-ஆம் ஆண்டு கொள்கை விளக்கக் குறிப்பின்படி 58 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இனியாவது சட்டம் ஒழுங்கு சீர்கேடிற்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments