இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 7 விமான நிறுவனங்கள் மூடல் - மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் தகவல்.. !!

0 1492

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 7 விமான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு விமானப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே. சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்,

கடந்த ஆண்டு மட்டும் ஹெரிடேஜ் ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் டர்போ மேகா ஏர்வேஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய இரண்டு விமான நிறுவனங்கள் மூடப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஏற்கனவே ஜெட் ஏர்வேஸ், ஜெட் லைட், Zexus, Deccan Charters, Air Odisha Aviation போன்ற விமான நிறுவனங்கள் மூடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

நிதி நெருக்கடி, திவால் நடவடிக்கை, என்ஜின்களுக்கான வன்பொருட்கள் கிடைக்காததால் விமான நிறுவனங்கள் மூடப்பட்டதாக வி.கே. சிங் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments