மணிப்பூர் வழக்கை சிபிஐ விசாரிப்பதாக மத்திய அரசுத் தரப்பில் மனு..!

0 1181

மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரித்து வருவதாக மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இரண்டு பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு ஆடையின்றி இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ காட்சிகள் வைரலாகப் பரவியதை அடுத்து நாட்டின்ஒட்டு மொத்த கவனமும் மணிப்பூர் பக்கம் திரும்பியது .

எதிர்க்கட்சியினர் மணிப்பூர் பிரச்சினையில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் தர வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இதனால் மழைக்காலக் கூட்டத் தொடர் முடங்கியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் இதுவரை வீடியோவில் படம் எடுத்த நபர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments