7-ஆம் வகுப்பு மாணவன் மரணத்தில் திருப்பம் : குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட மாணவன் கொலை செய்யப்பட்டது அம்பலம்

0 2666
7-ஆம் வகுப்பு மாணவன் மரணத்தில் திருப்பம் : குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட மாணவன் கொலை செய்யப்பட்டது அம்பலம்

சிதம்பரம் அருகே 7ம் வகுப்பு மாணவன் கோவில் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், சிறுவனை கொலை செய்த இளைஞன் கைது செய்யப்பட்டான்.

தெற்கு பிச்சாவரம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற மாணவன், சிதம்பரநாதன்பேட்டையில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு திருவிழாவுக்காக சென்றிருந்தார். கடந்த 23ம் தேதி அங்குள்ள கோவில் குளத்தில் மாணவன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

பிரேத பரிசோதனையில் மாணவனின் கழுத்து நெறிக்கப்பட்டிருப்பது தெரியவந்ததை அடுத்து கொலை வழக்காக மாற்றி விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், மாணவனின் நண்பனான 19 வயதான ராகுல் என்ற இளைஞனை பிடித்து விசாரித்தனர்.

அப்போது, மணிகண்டன் தனது அக்காவை பற்றி வேறொருவரிடம் தவறாக பேசியதால் ஆத்திரத்தில், கழுத்தை நெறித்து தண்ணீரில் அழுத்தி கொலை செய்ததாக ராகுல் ஒப்புக் கொண்டுள்ளான். இதனையடுத்து ராகுலை போலீசார் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments