இளநிலை மருத்துவப் படிப்பிற்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு தொடக்கம்.. 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் 1398 மாணவர்களுக்கு அழைப்பு..!

0 964

இளநிலை மருத்துவப் படிப்பிற்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியது.

சென்னை கிண்டியில் உள்ள உயர் சிறப்பு பண்னோக்கு மருத்துவமனையில் தொடங்கிய கலந்தாய்வை நேரில் பார்வையிட்ட மருத்துவக் கல்வி இயக்குனர் சாந்தி மலர், அரசு பள்ளிகளில் படித்து 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்று தெரிவித்தார்.

கலந்தாய்வில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களை தமிழக மாணவர்கள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments