காதல் ஜோடியிடம் தகராறு செய்த பெண் வீட்டார்.. போலீசார் முன்னிலையில் மகளை இழுத்து சென்ற தாய்.. !!

0 2746

சென்னைக்கு வந்து ரகசிய திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடியிடம் பெண்ணின் தாயார் தகராறு செய்து மகளை தம்முடன் இழுத்து சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் வேப்பிலாங்குளம் பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவரின் மகள் தர்ஷினி பிரியா, இவர் காவல்கிணறு பகுதியை சேர்ந்த கொத்தனாராக வேலை செய்து வரும் மரிய செபஸ்டின் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் கடந்த 10-ம் தேதி சென்னை தாம்பரத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் மாலைமாற்றி திருமணம் செய்து விட்டு மீண்டும் ராதாபுரம்  சென்றுள்ளனர்.

அங்கு பிரியா தற்கொலைக்கு முயன்றதால் கணவர் காப்பாற்றி ஆரல்வாய்மொழி மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

அங்கு சென்ற பிரியாவின் தாயார் மற்றும் உறவினர்கள் போலீசார் முன்னிலையில் வலுக்கட்டாயமாக இழுத்து சென்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments