இந்திய வர்த்தக ஊக்குவிப்பு கூட்டமைப்பு வளாகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி..

டெல்லி பிரகதி மைதானத்தில் கட்டுப்பட்டுள்ள இந்திய வர்த்தக ஊக்குவிப்பு கூட்டமைப்பின் புதிய வளாகத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
கட்டிட திறப்பு விழாவையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்ற பிரதமர், கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், பொறியாளர்கள் உள்ளிட்டோருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.
சுமார் 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் செலவில் 123 ஏக்கர் பரப்பளவில் சங்கு வடிவில் இந்த பிரம்மாண்ட வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கண்காட்சிகள் மற்றும் மாநாடுகளை நடத்த ஏதுவாக, கண்காட்சி அரங்குகள், ஆம்ஃபி தியேட்டர்கள், அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மொழிபெயர்ப்பாளர் அறை, ஒளி மேலாண்மை அமைப்பு உள்ளிட்ட வசதிகளுடன் இந்த வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு இந்த மையத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments