நாட்டின் 76வது சுதந்திரதின விழா கொண்டாட்டம்.. கோயம்புத்தூரில் தேசியக்கொடி தயாரிப்பு பணிகள் தீவிரம்.. !!

0 956

கடந்த ஆண்டு போன்றே நாட்டின் 76வது சுதந்திர தினத்தில் அனைத்து வீடுகளிலும் கொடியேற்றும்படி அரசு அறிவிக்க வேண்டும் என்று தேசியக்கொடி தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், கோயம்புத்தூரில் தேசியக் கொடி தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது.

கொடி தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராஜேந்திரன் என்பவர் செய்தியாளரிடம் பேசியபோது, சுதந்திர தின பவள விழாவை சிறப்பிக்கும் வகையில், ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை வீடுகளில் தேசியக் கொடி ஏற்றும்படி அறிவித்தால் கொடி தயாரிப்பாளர்கள் பயனடைவார்கள் எனக் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments