சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
சென்னையில் கேட்பாரற்று நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத வாகனங்களை அகற்ற உத்தரவு.. !!

சென்னை மாநகராட்சி பகுதியில் கேட்பாரற்று நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத வாகனங்களை அகற்ற சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் சாலைவெட்டுப் பணிகள் மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்த சேவைத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
சென்னையில் தன்னிச்சையாக நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், அனுமதியின்றி சாலைவெட்டுக்களை தன்னிச்சையாக மேற்கொள்ளக்கூடாது என்றும் இந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
Comments