பிரதமர் மோடி அரசு மீது மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டம்...!

பிரதமர் மோடி அரசு மீது மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர இருப்பதாகவும், அதற்காக, மக்களவைச் செயலகத்தில் இன்று நோட்டீஸ் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
எதிர்கட்சிகளின் கோரிக்கையை பிரதமர் நிராகரித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது எழுப்பப்படும் வாதத்திற்கு பிரதமரே பதில் சொல்வார் என்று நம்புவதாகவும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
Comments