டாஸ்மாக் சூப்பர்வைசரை அரிவாளால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட மங்கி குல்லா கொள்ளையன் கைது...!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் டாஸ்மாக் சூப்பர்வைசரை அரிவாளால் வெட்டி ஆறரை லட்சம் ரூபாயை பறிக்க முயன்ற வழிப்பறி கொள்ளையன் கைது செய்யப்பட்டான்.
குளச்சல் அருகே இரும்பிலி பொட்டல்கரையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் குளச்சல் பயணியர் விடுதி சந்திப்பு அரசு டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்துள்ளார்.
கடந்த 8-ம் தேதி அன்று இரவு வழக்கம்போல் டாஸ்மாக் கடையை பூட்டிவிட்டு வசூலான பணத்தை எடுத்துக் கொண்டு சக ஊழியர் ஒருவர் பைக்கில் வீட்டிற்கு சென்றுள்ளார்,அப்போது அங்கு பதுங்கி இருந்த மங்கி குல்லா அணிந்து இருந்த நபர் கோபாலகிருஷ்ணனை அரிவாளால் தாக்கி பணத்தை கொள்ளை அடிக்க முயற்சித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் மங்கி குல்லா அணிந்த நபர் நெய்யூரைச் சேர்ந்த அருண் ஷாஜூ என்பது தெரிய வந்தது.
Comments