ரூட்டு தறுதலைகளை ரோட்டு தலைகளாக மாற்றிய போலீஸ் ஆக்ஷன்..!

0 7721

சென்னை மாநகர பேருந்தின் கூரை மீது ஏறி பயணிகளுக்கு இடையூறு செய்த தியாகராய கல்லூரி மாணவர்களுக்கு போக்குவரத்து போலீசாரின் சிரமத்தை உணர்த்தும் விதமாக போக்குவரத்தை சரிசெய்யும் தண்டனை வழங்கப்பட்டது.

கல்லூரிக்கு படிக்க செல்கிறோம் என்பதை மறந்து , கெத்து காட்டுவதாக நினைத்து , 56 A என்ற மாநகர பேருந்தை சிறைபிடித்து, தங்களை புள்ளீங்கோக்களாக அறிவித்துக் கொண்டு விபரீதமாக கூரையில் ஏறி கும்மி அடித்த தியாகராய கல்லூரி மாணவர்கள் இவர்கள் தான்..!

பயணிகளுக்கு இடையூறு செய்த கல்லூரி புள்ளீங்கோக்களின் அட்ராசிட்டியை வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்த நிலையில் இந்த ரூட்டு தறுதலைகளை தட்டித்துக்கிய வண்ணாரப்பேட்டை போலீசார், அவர்கள் 4 பேரை துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி முன்பு நிறுத்தினர்.

கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தால் எதிர்காலம் வீணாகி விடும் என்பதால் அவர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிய, துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி, போக்குவரத்து போலீசாரின் பணிகள் எவ்வளவு சிரமம் என்பதை மாணவர்களை உணர வைக்கும் விதமாக திங்கட்கிழமை காலை பேசின் பாலம் ஜங்ஷனில் போக்குவரத்தை சீர் செய்ய உத்தரவிட்டார்

அதன்படி மாணவர்கள் ஒருநாள் போலீசாருடன் சேர்ந்து ஒழுக்கமாக போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர்

அடங்க மறுத்து ஏறுவதும், கெத்துக்காட்டுவதும் தான் வாழ்க்கை என்று வாலாட்டிய புள்ளீங்கோ பாய்ஸ் , வாலைச்சுருட்டிக் கொண்டு பக்குவமாக சாலையில் நின்று சைகைகாட்டி போக்குவரத்தை சரி செய்வதை வாகன ஓட்டிகள் வியப்புடன் பார்த்துச்சென்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments