2,000 ரூபாய் நோட்டை மாற்ற காலக்கெடு நீட்டிப்பு இல்லை - மத்திய அரசு

0 1185

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 30ம் தேதிக்கு மேல் வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாயை மாற்றுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் உள்ளதா என மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, அதுபோன்ற விஷயம் அரசின் பரிசீலனையில் இல்லை என்று குறிப்பிட்டார்.

இதனிடையே, புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களில் 87 விழுக்காடு பொதுமக்களால் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், 13 விழுக்காடு வங்கிகளில் மாற்றப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments