அமெரிக்காவில், கைகளை உயர்த்தியபடி சரணடைந்த கருப்பின இளைஞர் மீது போலீஸ் நாயை ஏவிய காவலர்....!

0 1900

அமெரிக்காவில், கைகளை உயர்த்தியபடி சரணடைந்த கருப்பின இளைஞர் மீது காவலர் ஒருவர் போலீஸ் நாயை ஏவி கடிக்க வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இம்மாதம் 4-ஆம் தேதி, ஒஹையோ மாநில தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற கண்டெய்னர் லாரியின் பின் சக்கரத்தில் மட்- ஃபிளாப் (mud flap) பொருத்தப்படாமல் இருப்பதை கவனித்த காவலர் ஒருவர் லாரியை நிறுத்துமாறு கூறியுள்ளார்.

அவரை கவனித்த பிறகும் பொருட்படுத்தாமல் சென்ற லாரி ஓட்டுநரை ஏராளமான போலீசார் வெகுதூரம் பின்தொடர்ந்து சென்றனர். ஒரு கட்டத்தில் லாரியை நிறுத்திவிட்டு இரு கைகளையும் தூக்கியபடி லாரியை ஓட்டிவந்த கருப்பின இளைஞர் சரணடைந்தார்.

கைகளை உயர்த்தி விட்டதால் நாயை அவிழ்த்து விட வேண்டாம் என சக காவலர்கள் கூறிவதை பொருட்படுத்தாமல் காவலர் ஒருவர் போலீஸ் நாயை லாரி ஓட்டுநர் மீது ஏவினார். அது அவரை கீழே தள்ளி கடித்து குதறியது.

லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நாயை ஏவிய காவலர் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என பலரும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments