மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுக மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்......!

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுக மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள பி. எஸ். என். எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மணிப்பூர் மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
தூத்துக்குடி மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதே போன்று வேலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Comments