"காலநிலை மாற்றத்தை தடுக்க அவசரநிலை பிரகடனப்படுத்த வேண்டும்..." - அன்புமணி ராமதாஸ்

காலநிலை மாற்றத்தை தடுக்க மத்திய அரசு அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஜி20 மாநாடு மற்றும் ஐ.நா காலநிலை மாநாடுகளில் காலநிலை மாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில், பெசன்ட் நகர் கடற்கரையில் மனித சங்கிலி பேரணி நடைபெற்றது.
அதில் பங்கேற்று பேசிய அன்புமணி ராமதாஸ், காலநிலை மாற்றத்தால் அடுத்த 25 ஆண்டுகளில் மாலத்தீவு காணாமல் போகும் என்றார்.
தமிழ்நாட்டில் இருப்பதிலேயே மோசமான நிறுவனம் என்.எல்.சி தான் என்றும் அது 4 மாவட்டங்களை அழித்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும், ஜூலை மாதம் உலக வரலாற்றில் அதிக வெப்பமான மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், இப்போதாவது பயம் வரவில்லையா? என்றும் கேள்வி எழுப்பினார்.
Comments