"விஜயகாந்த் போல மற்றவர்கள் அரசியலுக்கு வர நினைத்தால் மோசமான விளைவை ஏற்படுத்தும்" - பிரேமலதா

விஜயகாந்த் போல மற்றவர்கள் அரசியலுக்கு வர நினைத்தால் மோசமான விளைவைத்தான் அது ஏற்படுத்தும் என்று தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள தங்கள் கட்சியின் தலைமையகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு தலைமை வகித்த பின் பேட்டியளித்த பிரேமலதாவிடம் நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க தலைமையில் புதிதாக கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ள பிரேமலதா, தே.மு.தி.க. எந்த கூட்டணியில் இடம்பெறும் என்பதை விஜயகாந்த் அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சருடன் தாம் தொலைபேசியில் பேசியதாக வெளியான தகவல் தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.
Comments