பெற்றோருக்குத் தெரியாமல் பைக் ஓட்டிய போது விபத்து... சிறுவன் படுகாயம்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகில் பெற்றோருக்குத் தெரியாமல் இரு சக்கர வாகனம் எடுத்து ஓட்டிய சிறுவன் விபத்தில் படுகாயம் அடைந்தான்.
பசுவந்தனிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் கப்பிகுளம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தபோது டாஸ்மார்க் கடையில் அருகில் எதிரில் வந்த ரூபன் என்பவரது பைக் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சிறுவனுக்கு இடது கால் முட்டுக்கு கீழ் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதுவலியால் துடிதுடித்த சிறுவனுக்கு காவல்துறையினர் முதலுதவி செய்து ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
Comments