வீட்டில் ஊஞ்சல் ஆடியபோது புடவை கழுத்தில் இறுக்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு...!

ஆரணி அருகே ஊஞ்சல் ஆடியபோது புடவை கழுத்தில் இறுக்கி 7 வயது சிறுமி உயிரிழந்தார்.
கொங்கராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ரூபினா என்ற அந்த சிறுமி தனது வீட்டில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தார்.. அப்போது புடவை கழுத்தை இறுக்கியதால் சிறுமி மயக்கமானதாக கூறப்படுகிறது.
108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட ரூபினாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
Comments