அடுத்த 40 ஆண்டுகளுக்கு இலக்கை நிர்ணயித்து செயல்படும் கட்சி பா.ஜ.க. - வானதி சீனிவாசன்

10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
கவுண்டம்பாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசைக் கண்டித்து பா.ஜ.க.வினர் முழக்கமிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், மக்கள் பணிகளை யார் வந்து செய்தாலும், அதை வரவேற்க தயார் என்றார்.
அவரது கோவை தெற்குத் தொகுதியில் மக்கள் நீதி மய்யக் கட்சியினரின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
பாரதிய ஜனதா கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்கள் உருவாக்கப்படவில்லை என்ற கருத்தை மறுத்த வானதி சீனிவாசன், அடுத்த 40 ஆண்டுகளுக்கு இலக்கை நிர்ணயித்து செயல்படும் கட்சி பா.ஜ.க. என்றார்.
Comments