தென் அமெரிக்க நாடான பெருவில் மீண்டும் போராட்டம்.. அதிபர் டினா பொலுவார்டே பதவி விலக வலியுறுத்தி பேரணி.. !!

தென் அமெரிக்க நாடான பெருவில், அதிபர் டினா பொலுவார்டே பதவி விலகக் கோரி மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
தலைநகர் லிமாவில் திரண்டவர்கள், முன்கூட்டியே அதிபர் தேர்தலை நடத்தக் கோரி பேரணி சென்றனர். பேரணியை ஆயுதப்படை போலீசார் தடுத்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை போலீசார் கலைத்தனர்
தீவிர இடதுசாரி கொள்கை கொண்ட முன்னாள் அதிபர் பெட்ரோ காஸ்டிலோவின் ஆதரவாளர்கள், ஆட்சி மாற்றம் வேண்டும் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வலதுசாரி மற்றும் இடதுசாரி ஆதரவாளர்கள் மோதல் நீடிப்பதால் பெரு நாடு அமைதி குலைந்து காணப்படுகிறது.
Comments