அண்ணனை ஏமாற்றி, கண்ணிமைக்கும் நேரத்தில் காதலன் டூவீலரில் ஏறிச் சென்ற சிறுமி....!

கோவையில் அண்ணனை ஏமாற்றி, கண்ணிமைக்கும் நேரத்தில் மற்றொருவருடன் டூவீலரில் ஏறிச் சென்ற சிறுமி ஆந்திராவில் மீட்கப்பட்டார்.
சேலத்தைச் சேர்ந்த 16 வயதான அவர், கோவை அரசூரில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை செய்து வந்தார். சிறுமிக்கு செல்போன் மூலமாக பழக்கமான ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த 24 வயது தாமரைக் கண்ணன், அவரை காதலிப்பதாகக் கூறி வெளியே வருமாறு அழைத்துள்ளார்.
பெற்றோர் அல்லது சகோதரர் வந்தால் மட்டுமே விடுவார்கள் என்பதால் தன் சகோதரரை வரவழைத்துள்ளார்.
தங்கையின் அழைப்பை ஏற்று வந்த சகோதரர், நூற்பாலைக்குள் சென்று திரும்புவதற்குள், அவரது டூவிலரை, தாமரைக் கண்ணன் பஞ்சர் செய்துள்ளார்.
சிறிது நேரத்தில் தங்கையோடு வெளியே வந்த சகோதரர், பஞ்சரை சரி செய்ய அருகில் உள்ள கடைக்கு அழைத்துச் சென்றார். அப்போது அங்குவந்த தாமரைக் கண்ணனுடன், சட்டென்று பைக்கில் ஏறி அந்த சிறுமி தப்பிச் சென்றார்.
இதுகுறித்து விசாரித்த சூலூர் போலீஸார், விசாகப்பட்டினத்தில் தங்கியிருந்த சிறுமியை மீட்டு தாமரைக் கண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Comments