குஜராத் மாநிலம் ஜூனாகாட் மாவட்டத்தில் 8 மணி நேரமாக கொட்டிய கனமழையால் வெள்ளப் பெருக்கு..!

குஜராத் மாநிலம் ஜூனாகாட் மாவட்டத்தில் கன மழை கொட்டியதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் மும்பை-அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் நவஸ்ரீ அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்ரபட்டது. 8 மணி நேரத்தில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் ஆடுமாடுகள், ஏராளமான கார்கள் அடித்துச் செல்லப்பட்டன.
குஜராத்தின் தெற்கு மற்றும் சௌராஷ்ட்ரா பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கிராமங்கள் தீவுகளாக துண்டிக்கப்பட்டிருந்தன.ஆறுகளில் ஆபத்தான எல்லையைத் தொட்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அணைக்கட்டுகளில் நீர்மட்டம் உயர்ந்தது.
Comments