பள்ளிக்கு புதிய கட்டிடம் வேண்டுமென முதல்வருக்கு கடிதம் எழுதிய மாணவி கைகளாலேயே அடிக்கல் நாட்டி கட்டட பணி தொடக்கம்..!
அம்பாசமுத்திரம் அருகே பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டடம் வேண்டுமென்று முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய சிறுமியையே வைத்தே புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
சிங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டடம் பழுதாகிக் கிடந்த நிலையில், புதிய கட்டடம் கோரி அப்பள்ளியில் 2ஆம் வகுப்பு படிக்கும் மாணவி இஷா என்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதனையடுத்து முதலமைச்சரின் பரிந்துரைப்படி புதிய வகுப்பறை கட்டுவதற்கு 30 லட்சம் ரூபாய் அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது. இன்று கட்டுமானப் பணிகள் தொடங்கிய நிலையில், கோரிக்கை வைத்த சிறுமியை கௌரவம் செய்யும் விதமாக அவரது கைகளாலேயே அடிக்கல் நாட்டப்பட்டது.
Comments