சென்னை புறநகர் ரயில்களில் உரிய பாதுகாப்பு இல்லை... பெண் பயணிகள் அச்சம்..!

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வந்த பெண் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, புறநகர் ரயில்களில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக பயணிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை எனவும், சில ரயில் நிலையங்களில் இரவு நேரத்தில் மின் விளக்குகள் சரியாக எரியாமல் போதிய வெளிச்சம் இல்லாததால், ரயிலில் இருந்து இறங்கி வெளியே வர அச்சமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், பெண்கள் பயணிக்கும் இரயில் பெட்டிகளில் குறைந்தது 2 பெண் காவலரையாவது பாதுகாப்புக்கு நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments