அமெரிக்காவின் பென்டகனின் பரப்பளவையே மிஞ்சும் அளவுக்கு சூரத்தில் வைர வர்த்தக மையம்.. பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் என தகவல்..!!

0 1855

அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகனின் பரப்பளவையே மிஞ்சும் அளவுக்கு குஜராத் மாநிலம் சூரத்தில் 35 ஏக்கரில் வைர வர்த்தக மையம் அமைய உள்ளது.

3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், அமைய உள்ள இந்த வளாகத்தில், 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வைர தயாரிப்பு நிறுவனங்களின் அலுவலகங்கள் இடம்பெற உள்ளன.

சூரத் டயமண்ட் போர்ஸ் என்ற நிறுவனம் இந்த கட்டடத்தை கட்டுகிறது. பணிகள் முடிவதற்கு முன்பே, வைர நிறுவனங்களால் அனைத்து பாகங்களும் வாங்கப்பட்டுவிட்டன.

இந்த வர்த்தக மையத்தில், வெட்டி எடுக்கப்பட்ட வைரம் முதல் பாலிஷ் போடப்பட்ட வைரம் வரை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தக மையம் வாயிலாக ஒன்றரை லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று சூரத் டயமண்ட் போர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேமராக்கள், அதிநவீன கட்டுப்பாட்டு அறைகள் என பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இந்த வைர வர்த்தக மையத்தை வரும் நவம்பர் 21-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments