"அமலாக்கத்துறையின் சோதனைகள் குறித்து திமுக கவலைப்படவில்லை" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1603

பீகாரிலும் கர்நாடகாவிலும் தொடர்ந்து கூட்டப்படும் கூட்டங்கள் பாஜகவுக்கு மிகப்பெரிய எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் அதன் வெளிப்பாடுதான் அமலாக்கத்துறை சோதனை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கச் செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு செய்தியாளர்களை சந்தித்தார்.

எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் நோக்கத்தை திசை திருப்புவதற்காக பாஜக செய்து கொண்டிருக்கும் தந்திரம் தான் அமலாக்கத் துறையின் சோதனை என அப்போது அவர் கூறினார்.

அமலாக்கத்துறையின் சோதனை மற்றும் அவர்கள் கொடுக்கும் அழுத்தம் என்பது எங்களுக்கு தேர்தல் வேலையை சுலபமாக மாற்றும் என்று கூறிய முதலமைச்சர், மேகதாது பிரச்சினையை பொருத்தவரையில் கருணாநிதி இருக்கும்போது எப்படி முயற்சி மேற்கொள்ளப்பட்டதோ அதே முயற்சி தற்பொழுதும் தொடரும் என்றார்.

இன்று நடைபெற இருக்கக்கூடிய கூட்டம் என்பது இந்தியாவை காப்பாற்றுவதற்கான, பாஜக வை வீழ்த்துவதற்கான கூட்டம் என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments