போதைப் பொருளை தடுக்க அரசு மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது - உதயநிதி

0 1218

போதைப் பொருளைத் தடுக்க அரசு மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது என்று குறிப்பிட்ட அமைச்சர் உதயநிதி, பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுகொண்டார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் போதையற்ற தமிழ்நாடு - ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தின் நிறைவு விழா சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் நடைபெற்றது.

இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் உதயநிதி, போதையற்ற தமிழ்நாடு ஒரு கோடி கையெழுத்து என்ற ஆக்கப்பூர்வமான இயக்கத்தை முன்னெடுத்ததற்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

போதை பொருள் வழக்கில் கைதானால் மிக எளிதில் ஜாமீன் கிடைக்கும் என்ற நிலை தற்போது முற்றிலும் மாறி இருப்பதாகக் குறிப்பிட்டார்.

மேலும், போதை தடுப்பு நடவடிக்கைகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments