மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்.. சரத் பவார் உடன் அஜித் பவார் திடீர் சந்திப்பு..!!

மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்த துணை முதலமைச்சர் அஜித் பவார், கட்சியில் பிளவு வேண்டாம், ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு அஜித் பவார், அவரது தரப்பு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் உள்ளிட்டோர் சென்றனர்.
பின்னர் சரத் பவாரிடம் ஆசி பெற்ற அவர்கள், கட்சியில் ஒற்றுமை நிலவ வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனை செய்தியாளர்களிடம் கூறிய பிரபுல் பட்டேல், விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மாநில சட்டமன்றம் நாளை கூட உள்ள நிலையில், சரத் பவாரை அஜித் பவார் சந்தித்து பேசியுள்ளார். இதனால் கட்சித் தாவல் நடவடிக்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்று அரசியல் வட்டாரங்களில் நம்பப்படுகிறது.
Comments