சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி பணத்தை ஏமாற்றிய சினிமா தயாரிப்பாளரை கடத்தி சென்ற 3 பேர் பிடிபட்டனர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி பணத்தை ஏமாற்றிய சினிமா தயாரிப்பாளரை கடத்தி சென்ற மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் கிருஷ்ண பிரசாத். கன்னடம், தமிழ் மற்றும் மலையாள படங்களின் விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளரான இவர் ரங்கசமுத்திரத்தை சேரந்த கரிகாலன் , கார்த்திகேயன் ஆகிய இருவரிடம் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வாங்கி விட்டு, சினிமாவில் வாய்ப்பு பெற்று தரவில்லை எனகூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும், கிருஷ்ணபிரசாத்தை காரில் கடத்தி சென்றுள்ளனர். வடக்குப் பேட்டை வாரச்சந்தை பஸ் ஸ்டாப் அருகே நடபெற்ற வாகன தணிக்கையில் அவர்கள் போலீசாரிடம் பிடிபட்டனர்.
Comments