அடாவடியாக சுங்கம் வசூலிக்கும் கப்பலூர் சுங்கச்சாவடி.. முதலமைச்சரின் வருகையால் அடியாட்களை நிறுத்தவில்லையா..? என அப்பகுதி மக்கள் கேள்வி

0 2198

விதிமுறைகளுக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள திருமங்கலம், கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் உள்ளூர் வாகன ஓட்டிகளுடன் தகராறில் ஈடுபட்டு அடாவடியாக கட்டணம் வசூலித்து வரும் நிலையில், மதுரையில் கலைஞர் நூலக திறப்பு விழாவுக்கு வருகை தரும் முதலமைச்சர் ஸ்டாலினை வரவேற்பதற்காக கட்சிக்கொடி கட்டிய வாகனங்களை மட்டும் சுங்கச்சாவடி வழியாக இலவசமாக செல்ல அனுமதித்தனர்.

வழக்கமாக அடியாட்களை வைத்து வலுக்கட்டாயமாக கட்டணம் வசூலிப்பவர்கள் இப்போது கட்சியினரின் வாகனங்களை இலவசமாக அனுமதிப்பது எப்படி. முதலமைச்சர் வருவதால் அடியாட்களை நிறுத்தவில்லையா என ஆவேசத்துடன் கேள்வி எழுப்புகின்றனர் அப்பகுதி மக்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments