பொது வெளியில் திட்டிய பெண்ணை வீடு புகுந்து தீ வைத்தவர் கைது... கள்ளக்காதல் விவகாரத்தால் விபரீதம்...!

செங்கல்பட்டு அடுத்த பாலூரில் பொது வெளியில் திட்டிய பெண்ணை வீடு புகுந்து மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
பெயிண்டரான பிரதாப், திருமணமாகி குழந்தை இல்லாததால் அதேப்பகுதியைச் சேர்ந்த பிரியா என்பவருடன் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இதனை பிரதாப்பின் மனைவி மற்றும் மைத்துனர்கள் கண்டித்ததைத் தொடர்ந்து பிரியாவுடனான பழக்கத்தை அவர் கை விட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, சாலையில் நின்றுக் கொண்டிருந்த பிரதாப்பை பல பெண்கள் முன்னிலையில் பிரியா தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, அதிகாலையில் பிரியாவின் வீட்டிற்குச் சென்ற பிரதாப், தூங்கிக் கொண்டிருந்த பிரியா மீது மண்ணென்ணையோடு, தின்னரை கலந்து ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த பிரியா சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Comments