ஓடும் பேருந்தில் ஏற முயன்று கால் இடறி கீழே விழுந்த கல்லூரி மாணவன் பின் சக்கரத்தில் சிக்கி பலி

சென்னை கோயம்பேடு அருகே ஓடும் பேருந்தில் முன் படிகட்டில் ஏற முயன்று நிலை தடுமாறி கீழே விழுந்த கல்லூரி மாணவர், பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
புளியந்தோப்பைச் சேர்ந்த சூர்யா என்ற மாணவர், கோயம்பேட்டிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். நேற்று கல்லூரி முடிந்து வீட்டுக்குச் செல்ல சத்திரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளார். அப்போது மாநகரப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சற்று தூரத்திலேயே பயணிகளை ஏற்றி, இறக்கிவிட்டு புறப்பட்டதாக தெரிகிறது.
பேருந்து குறிப்பிட்ட வேகம் எடுத்த நிலையில், ஓடி வந்து முன்பக்க படிக்கட்டில் ஏற முயன்ற சூர்யா, கால் வழுக்கி கீழே விழுந்ததாகவும் அப்போது பேருந்தின் பின்பக்க சக்கரம் அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிகிறது.
விபத்தை ஏற்படுத்திய மாநகர பேருந்து ஓட்டுநர் வெங்கடேசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Comments