தக்காளி விவசாயியை கொடூரமாகக் கொன்று ரூ.30 லட்சம் கொள்ளை... பணப் புழக்கம் அதிகரித்துள்ளதால் தக்காளி விவசாயிகளை குறிவைக்கும் மர்ம கும்பல்..!

ஆந்திராவில் தக்காளி விற்பனையில் கிடைத்த 30 லட்ச ரூபாய் லாபப் பணத்துடன் சென்ற விவசாயியை கொன்று பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நாடு முழுவதும் தக்காளி விலை 3 இலக்கங்களைத் தொட்டுள்ள நிலையில், ஆந்திராவில் விளைச்சல் அதிகமாக உள்ளதால் அங்கிருந்து பல மாநிலங்களும் தக்காளியை இறக்குமதி செய்து வருகின்றன.
போடிமல்லாடினா என்ற கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் ரெட்டி என்ற விவசாயி, கடந்த 20 நாட்களில் தக்காளி விற்பனை செய்ததில் 30 லட்ச ரூபாயை லாபமாக ஈட்டியுள்ளார்.
புதன் கிழமை இரவு மொத்த கொள்முதல் வியாபாரியிடம் தக்காளியை கொடுத்துவிட்டு 30 லட்ச ரூபய் பணத்தை வாங்கிக் கொண்டு அவர் பைக்கில் ஊர் திரும்பியுள்ளார்.
அப்போது ராஜசேகரை பின் தொடர்ந்து சென்ற மர்ம கும்பல், அவரைத் தாக்கி, தலையில் கல்லைப் போட்டு கொடூரமாகக் கொலை செய்துவிட்டு பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
Comments