தகவல் தொழில்நுட்ப நிறுவன உரிமையாளர், தலைமைச் செயல் அதிகாரி படுகொலை... முன்பகையால் இருவரையும் குத்திக் கொன்ற முன்னாள் ஊழியர்

0 2171

பெங்களூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஆகியோரை முன்னாள் ஊழியர் ஒருவர் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்ருதஹள்ளி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஏரோனிக்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர்  பணிந்தரா சுப்பிரமணியா மற்றும் தலைமைச் செயல் அதிகாரி விணு குமார் ஆகியோர் நேற்று அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அலுவலகத்திற்குள் புகுந்த 3 பேர் பணிந்திரா, விணுகுமார் ஆகியோரை சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.

அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் சுதாரிப்பதற்குள் கொலையாளிகள் 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் தொழில் போட்டி காரணமாக இரட்டைக்கொலை நடந்திருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக முன்னாள் ஊழியரான பெலிக்ஸ் மற்றும் கூட்டாளிகள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments