வண்டி ஓட்டுற தம்பிக்கு மனசுல வின்டீசல்ன்னு நெனப்பு.... ஓவர் குடி உடம்புக்கு ஆகாது.... விரட்டி விரட்டி வெளுத்த மக்கள்...!

0 4505

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு கும்பலாக சென்று மூக்கு முட்ட மது குடித்து, அதிவேகத்தில் காரை ஓட்டி இரு சக்கரவாகனங்கள் மீது மோதிவிட்டு நிறகாமல் சென்ற காரை விரட்டிப்பிடித்த மக்கள் போதை இளைஞர்களை போதும் போதும் என்கிற அளவுக்கு வெளுத்து எடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது

பாஸ்ட் அண்ட் பியூரியஸ் நாயகன் வின் டீசல் போல அதிவேகத்தில் வாகனம் ஓட்டிச்சென்று இரு சக்கர வாகனங்களை அடித்து தூக்கியதால் தர்மடி அடி வாங்கி நடக்க இயலாமல் அமர்ந்திருக்கும் மெட்ராஸ் போதை பாய்ஸ் இவர்கள் தான்..!

இங்கே எழுந்திருக்க இயலாமல் குப்புற படுத்துகிடக்கிறாரே ... இவர் தான் மேடவாக்கத்தை சேர்ந்த சுனில்..!

மூக்கமுட்ட குடிக்கலாம் என்று காரில் தனது 4 கூட்டாளிகளுடன் புதுச்சேரிக்கு 10ந்தேதி புறப்பட்டுச்சென்றுள்ளனர். அங்கு விடிய விடிய மது குடித்து விட்டு பிற்பகலில் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர். மிதமிஞ்சிய போதையில் இருந்த அந்த 5 குடிகார பாய்ஸும், ஒருவழிப்பாதை என்பது தெரியாமல் நேருவீதிக்குள் காரை ஓட்டிச்சென்றுள்ளனர். போலீசார் மறித்ததால் சிக்காமல் இருப்பதற்காக அதிவேகத்தில் சென்றுள்ளனர். சாலையோரம் நின்ற இரு சக்கர வாகனம் மீது மோதியதாகவும், அங்கிருந்தவர்கள் காரின் ஓட்டுனரை பிடித்து, வெளியே இழுக்க முயன்றதும் அங்கிருந்து மின்னல் வேகத்தில் காரை கிளப்பிச்சென்றுள்ளனர்.

காரின் முன்பக்கத்தில் சிக்கிய இரு சக்கர வாகனத்தை சினிமாவில் வருவது போல மோதி தள்ளிச்சென்றது. போலீசார் விரட்டிச்சென்றும் பிடிக்க இயலவில்லை, அந்த காரை சிலர் இருசக்கரவாகனத்தில் துரத்திச்சென்றனர்

தொடர்ந்து நிற்காமல் முத்தியால் பேட்டை மணிக்கூண்டு வழியாக லாஸ்பேட்டை விமான நிலையம் செல்லும் சாலையில் கார் சீறிப்பாய்ந்தது. வழியில் அந்த காரின் டயர் பஞ்சர் ஆன நிலையிலும் 15க்கும் மேற்பட்ட இரு சக்கரவாகனங்களையும் ,சாலையோரம் நடந்து சென்ற பொதுமக்களையும் இடித்து தள்ளிவிட்டு நிறுத்தாமல் சென்றனர்.

விமானம் நிலைய பின்புறம் சென்று சாலையோர புதரில் சிக்கி தட்டுதடுமாறி ஒடை அருகே அந்தக்கார் மணலில் சிக்கி நின்றது , பின் தொடர்ந்து வந்த இளைஞர்கள் காரின் கண்ணாடி, மற்றும் கதவுகளை உடைத்து உள்ளிருந்தவர்களை வெளியில் இழுத்து போட்டு தர்ம அடி கொடுத்தனர்.

காரின் ஓட்டுனர் இருக்கையில் இருந்து எழுந்துவர மறுத்த சுனில் மீது கல்லை தூக்கி வீசி, சரமாரியாக அடித்து உதைத்து, ஆடைகளை கிழித்து உள்ளாடையுடன் வெளியே தூக்கி வந்தனர்

காருக்குள் இருந்த 5 பேரும் தங்களுக்கு விழுந்த அடிமழையால் , போதை தெளிந்தாலும் எழுந்திருக்க இயலாமல் அப்படியே தவழ்ந்தனர்

இதையடுத்து காரில் வந்த சுனில், எபினேசர், தீலிப், ஆஷிக், ஸ்ரீநாத் ஆகிய 5 பேரையும் ஆம்புலன்ஸ் மூலமாக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர். கடந்த சில வாரங்களில் மட்டும் வெளியூர்களில் இருந்து புதுச்சேரிக்கு மது அருந்தவரும் இளைஞர்களால் ஏராளமான விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்த போலீசார். மது போதையில் வாகனம் ஓட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments