பளார்.... பளார்... பளார்.... பாட்டிலுக்கு ரூ.10 ஏன்.? மதுப்பிரியரை தாக்கிய எஸ்.ஐ...!

0 7514

செங்கல்பட்டு மதுபான கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக கேட்ட டாஸ்மாக் ஊழியருக்கு எதிராக கேள்வி கேட்ட மதுப்பிரியரை சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கிய வீடியோ வெளியாகி உள்ளது

செங்கல்பட்டு நகரத்திற்குள் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் திங்கட்கிழமை பிற்பகல் கல்பாக்கம் அடுத்த அனுபுரத்தை சேர்ந்த இளைஞர்கள், தங்களது ஊரில் திருவிழா என்பதால், 6 பீர் பாட்டில் உள்ளிட்ட மதுவகைகளை வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் செல்ல.தயாரான போது, அங்கு வந்த போலீசார் அந்த மதுப்பாட்டில்களுடன் பைக்கை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றதால் அங்கு சல சலப்பு ஏற்பட்டது .

அந்த ஊரை சேர்ந்தவர்கள், பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குறான் , புகார் அளித்தால் அத கேட்க ஆளில்லை, எங்ககிட்ட வந்து வீரத்த காட்டுங்க என்று போலீசாரை சத்தமாக திட்டினர்.

இதற்க்கிடையே அங்கு மதுவாங்க வந்த் மதுப்பிரியர் ஏன் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குகிறீர்கள் என்று டாஸ்மாக் ஊழியர்களை நோக்கி கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தார்

அப்போது அங்கு வந்த எஸ்.ஐ. ராஜா, அந்த மதுப்பிரியரை பிடித்து இழுத்து சரமாரியாக தாக்கினார்

தொடர்ந்து மது வாங்க நின்றவர்களையும் விரட்டி விட்டுச்சென்றார்

இந்த சம்பவத்துக்கு அங்கு கூடியிருந்த மதுப்பிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சாத்தான்குளம் இரட்டை கொலை சம்பவத்தித்கு பின்னரும் சில போலீசார் தங்களை திருத்திக் கொள்ளவில்லை என்பதற்கு இந்த தாக்குதல் சம்பவம் சாட்சியாகி இருக்கின்றது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments