கரூரில் செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு தொடர்புடைய இடங்களில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் 2 முறை சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், மூன்றாவது முறையாக இன்று கரூரில் 10 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ராயனூரில் உள்ள கொங்கு மெஸ் உரிமையாளர் சுப்பிரமணியின் வீடு, சின்னாண்டான் கோவில் சாலையில் உள்ள ராமவிலாஸ் நெசவு தொழிற்சாலை, கோவை சாலையில் உள்ள சக்தி மெஸ் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
அதிபன் கேபிடல்ஸ் மற்றும் குறிஞ்சி பைனான்ஸ் என்ற நிதி நிறுவனங்களிலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புடன் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments