காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்குகள் ஆக.2 முதல் உச்சநீதிமன்றம் தொடர் விசாரணை

0 848

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

3 ஆண்டுகளாக விசாரிக்கப்படாமல் இருந்த இந்த வழக்குகள், இந்த ஆண்டு இறுதிக்குள் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படவேண்டியுள்ளதால் இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டன.

அப்போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, இந்த வழக்குகள் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் விசாரிக்கப்படும் என அறிவித்தது.

வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் வரும் 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments