முத்துசாமி மது விலக்கு அமைச்சரா..? அல்லது மது விற்பனை அமைச்சரா..? 90 ML மது பாக்கெட் அறிமுகம் செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு அன்புமணி கண்டனம்

90 எம்.எல். டெட்ரா மது பாக்கெட் விற்பனை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்தார்.
செங்கல்பட்டில் கடந்த 50 நாட்களில் தமது கட்சியின் நிர்வாகிகள் 3 பேர் கொல்லப்பட்டதை கண்டிப்பதாகக் கூறி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அன்புமணி, முத்துசாமி மது விலக்கு அமைச்சரா? அல்லது மது விற்பனை அமைச்சரா? என்று கேள்வி எழுப்பினார்.
காவல்துறைக்கு தெரியாமல் தமிழ்நாட்டில் கஞ்சாவோ, ஒரு சொட்டு கள்ளச்சாராயமோ விற்க முடியாது என்று கூறிய அன்புமணி, தமிழ்நாடு கஞ்சா நாடாக மாறி வருவதாக அன்புமணி குற்றஞ்சாட்டினார். மீசை கூட வளராத சிறுவர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகி இருப்பதாக அவர் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணியிடம் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்திற்கு அழைப்பு வந்துள்ளதா என கேட்கப்பட்டது. அதற்கு, மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க இருப்பதாக தெரிவித்த அன்புமணி, கூட்டத்தில் பங்கேற்பது பற்றி கட்சி ஆலோசனை செய்து முடிவு எடுக்கும் என்றார்.
Comments